Skip to main content

கொல்லவார் குல சாளுக்கியர்கள் - பாகம் 1


கொல்லவார் குல சாளுக்கியர் -1 




வேங்கி சாளுக்கிய பேரரசர்
ஸ்ரீராஜராஜ நரேந்திரன்




சந்திர குல சாளுக்கியர்:-



சாளுக்கியர்கள் தங்களை சந்திரகுல மரபினர் என்று பல கல்வெட்டுகள் செப்பேடுகள் வெளியிட்ட போதிலும், நாம் இங்கே மேற்கோள் காட்டவிருப்பது இரண்டு சாசனங்கள்:


1, நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியன் கல்வெட்டு


2, வீரசோழனாரின் (1091-1092) செல்லூர் செப்பேடு

 


4ம் விக்ரமாதித்த சாளுக்கியன் கல்வெட்டு:



4ம் விக்ரமாதித்தன் 38ம் ஆட்சியாண்டு கல்வெட்டு



வேங்கி சாளுக்கிய அரசர் நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியரின் 38வது ஆட்சியாண்டு கல்வெட்டு சாளுக்கிய வம்சாவளியை தெளிவாக கூறுகின்றது இதன்படி சாளுக்கிய வம்சம் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியது அந்த மரபில் அத்திரிமாமுனிவர் சந்திரதேவர்  புதன்  புருரவா  ஆகியோர்களின் வம்சாவளி வரிசையில் சாளுக்கிய மரபு தோன்றியது எனக் குறிப்பிடுகிறது.



வீரசோழனின் செல்லூர் செப்பேடு:



செல்லூர் செப்பேடு - 1091-1092



சோழ மன்னன் வீரசோழனார் கி.பி.1091-1092 ஆண்டில் வெளியிட்ட செல்லூர் செப்பேட்டு சாசனம் சசி குலத்து சாளுக்கிய பேரரசின் மரபை கீழ்கண்டவராறு விவரிக்கின்றது.

அத்திரிமாமுனிவர் சந்திரதேவர்  ஆயு  யயாதி  புரு மகாராசன், இவர்களின் வம்சாவளி வரிசையில் சாளுக்கிய அரச மரபு தோன்றியது எனக் குறிப்பிடுகிறது.

இவைகளின் மூலம் சாளுக்கியர்கள் சந்திரகுலத்தவர்கள் என்பதும் அவர்களின் வம்சாவளி முன்னோர் குறித்தும் தெளிவாகிறது.




துவாரகை ஸ்ரீகிருஷ்ணர் மரபில் வந்த சாளுக்கியர்:-



குலோத்துங்க சோழன் உலா - கவிசக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர்




குலோத்துங்கசோழன் உலா :



"31, கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன்-பொற்றுவரை

32, யிந்து மரபின் றிருக்குலத்தி லுதித்துச் வந்து மனுகுலத்தை வாழ்வித்த- பைந்தளிர்க்கை

33, மாதர் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின் காதற் பெயரன்: கனகனவன்"

  - கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்



பாடலின் பொருள்:


முகில் வண்ணனாகிய (நிலவண்ணன்) ஸ்ரீகண்ணபிரானின் மரபில் அவனது துவாரகாபுரியில் சந்திர திருக்குலத்தில் தோன்றி மனு குலமாகிய கரிகாலன் வழிவந்த சோழர் குலத்தை வாழ்வித்தவன் கரிகால சோழன் என்று இப்பாடல் வெளிப்படையாய் தெரிவிக்கின்றது. இந்நூலின் மகத்துவம் என்னவென்றால் சோழ அரசின் மிக முக்கியத்துவம் மிகுந்த அவைப்புலவர் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் முதலானவர்கள் கேட்டுணர்ந்து மகிழ்ந்த பெருமைக்குரியது. எனவே இந்நூலில் சாளுக்கியர்-சாளுக்கிய சோழர்களின் மரபை அறிய உதவும் ஆவணங்களில் மிக மிக உயர்ந்த தன்மையுடையது.



குலோத்துங்க சோழனின் அவைப்புலவர்
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்



சந்திரகுலத்தில் துவாரகாபுரி ஸ்ரீகிருஷ்ணரின் யாதவ மரபில் குலோத்துங்கனின் தந்தைவழி வம்சமான வேங்கி சாளுக்கிய மரபு பிறந்ததாக இரண்டாம் குலோதுங்க சோழன் அவையின் முதன்மை புலவரும் கவிச்சக்கிரவர்த்தியுமான ஒட்டக்கூட்டத்தர் தனது குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலில் தெளிவுபட தெரிவிக்கின்றார்.



சாளுக்கிய சோழ பேரரசர்
மூன்றாம் குலோத்துங்க சோழன்



சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனாருக்கு பிறகு அவரின் மகன்கள் சில காலம் சோழப்பேரரசை ஆண்டனர், அம்மன்னர்களுக்கு பிறகு வாரிசுகள் இல்லாமல் போன காரணத்தினால் ராஜேந்திர சோழனின் மகளான அம்மங்காதேவயாருக்கும், வேங்கி (கீழை) சாளுக்கிய அரசரான ராஜ ராஜநரேந்திரனுக்கும் பிறந்த ராஜேந்தின் என்னும் இயற்பெயர் கொண்ட குலோத்துங்கன் சோழ பேரரசின் வாரிசாக தத்தெடுக்கப்பட்டு சோழ அரியணையேறி குலோத்துங்க சோழனாக கி.பி.1070ல் முடிசூடினார். வாரிசுகள் இன்றி அழியவிருந்த சோழப்பேரரரசை வாரிசாக வந்து முடிசூடிய காரணத்தினால் "மனுகுலத்தை வாழ்வித்தவன்" என்று போற்றப்பட்டார்.




துவாரகை வேளிர் குல சாளுக்கியர்:-



குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்திகள்




● குலோத்துங்க சோழன் தனது மெய்கீர்த்தியில்

"வில்லது கோடா வேள்குலத் தரசர் அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும்"

 என்னும் வரிகளில் தமது சாளுக்கிய மரபை வேள்குலத்தரசர் (வேளிர் குலத்து அரசர்) என்று குறிப்பிடுகின்றார்.



முதலாம் ராஜாதிராஜன் மெய்க்கீர்த்திகள்




● அதேபோல, சாளுக்கிய-சோழ மரபில் வந்த  முதலாம் ராஜாதிராஜ சோழன் தனது மெய்கீர்த்தியில்

"வில்லவர் மீனவர் வேள்குலச் சளுக்கியர் வல்லவர் முதலாய் வணங்கவீற் றிருந்து தராதலம்"

என்னும் வரிகளில் தன்னுடைய சாளுக்கிய மரபை வேள்குல சளுக்கியர் (வேளிர்குல சாளுக்கியர்) என்றும் வல்லவர் என்றும் இருப்பெயர்களில் குறித்துள்ளார். இவைகளை தவிர்த்து :


பிங்கலந்தை

• "தாரகாரியும் சளுக்கியர் வேந்தனும் வேனிலாளனும் வேளெனலாகும்".



பிங்கலந்தை மற்றும் திவாகரம் வரிகள்




திவாகரம்

• "வேன்புலவரசர் சளுக்கு வேந்தர்"

• "கேழல் வேள் புலவரசர் கொடியே

ஆகியவைகளும் சாளுக்கியர்கள் வேளிர்குலத்தவர்கள் என்பதை நிறுவும் சில சான்றுகளாகும்.


வேள்புலம்-வேள்புலத்தரசர்:


* வேள்+புலம் = வேளிர் நிலப்பரப்பு

சாளுக்கியர்கள் தாம் ஆண்ட நிலப்பகுதிகளை வேள் புலம் என்றழைத்தனர், அதாவது வேளிரின் ஆட்சிப்பரப்பு என்பது இதன்பொருள்.


வேள்+புலம்+அரசர் = வேளிர் நிலத்திற்குரிய அரசன்

சாளுக்கியர்கள் வேளிர் மரபினர் ஆதலால் தமது ஆட்சிப்பரப்பை வேள்புலம் என்றும் அப்பகுதிகளை ஆளும் தம்மை வேள்புலத்தரசர்கள் என்று வழங்கிக்கொண்டனர்.


இவைகளையும், "பொற்-துவரை முகல்வண்ணன் மரபினன்", சந்திர குலத்தில் தோன்றிய சாளுக்கியர்கள் முதலானவைகளையும் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் பண்டைய காலத்தில் அகஸ்திய மாமுனிவரால் தென்னகத்திற்கு அழைத்துவரப்பட்ட துவாரகை வேளிர் பிரிவினரே சாளுக்கியர்கள் என்பது தெளிவாகிறது.




வேள் குல ஆய் வேளிர் தொடர்பு:-



தேர்வேள் ஆய்



புறநானூறு - 133




மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற் கேட்பின் அல்லது, காண்பறி யலையே; காண்டல் சால வேண்டினை யாயின், மாண்டநின் விரை வளர் கூந்தல் வரைவளி உளரக், கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, 

மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

                                              - புறநானூறு 133



பாடலின் பொருள்:-


மெல்லிய இயல்பினையுடைய விறலியே! வேள் ஆயின் புகழைக் கேட்டனையேயன்றி, அவன் வடிவைக் கண்டறியாதவள் நீ, அவனைக் காண விரும்பினாயானால், நின் கூந்தலைக் காற்று அசைத்து மயிற்பீலி போலப் பரக்கச் செய்ய, இம் மலை வழியே நடந்து, மழை போன்று வழங்கும் வேள் ஆயைக் காண, இப்பொழுதே போவாயாக. ('மழையின் பயனாக விளைவுகள் மிகும்; அதுபோல ஆயின் கொடையால் நீயும் வளப்படுவாய் என்பது இது').



மாவேள் ஆய்



புறநானூறு - 135




மன்றுபடு பரிசிலர்க் காணின், கன்றொடு கறையடி யானை இரியல் போக்கும் மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்! களிறும் அன்றே; மாவும் அன்றே; ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;

                                              - புறநானூறு 135



பாடலின் பொருள்:-


பரிசிலர்க்குக் கன்றுடன் பிடியும் அணியணியாக வழங்கும் மலைநாடனே! மாவேளாகிய ஆயே! யானையும் குதிரையும் தேருமன்று யான் வேண்டுவது!.



ஆய் வேளிர், வேள் பாரி வள்ளல் முதலான வேளிர்கள் அனைவரும் அகஸ்திய மாமுனிவரால் துவாரகையில் இருந்து தென்னாட்டிற்கு அழைத்துவரப்பட்ட யாதவர்களான ஆயர்கள் என்பது வரலாறு.




சந்திரகுலத்தோன்றல் ஆய் வேளிர்:-



அய் வேளிர்கள் தங்களை சந்திர குலத்தவர்கள் என்றும், எந்த குலம் தோன்றியதால் சந்திரதேவனின் களங்கம் நீங்கி பெருமையடைந்தானோ அதுவே ஆய்குலம் என்று ஆய்வேளிரின் சமஸ்கிருத மொழி பாலியத்து சாசனத்தின் மூலம் கீழ் கண்டவாறு விவரித்துள்ளனர்.




துவாரகை சந்திர குலத்தோன்றல் ஆய்வேளிர்




சுலோகம் - 4


(இது முதல் நான்கு சுலோகங்களில் விருஷ்ணிகுலத்தின் சிறப்பு கூறப்படுகிறது. விருஷ்ணிகுலம் = யாதவகுலம், ஆய்குலம்). எந்தக் குலம் வெண்ணிலாவைப்போல் சுத்தமாகவும் உலகத்தை மகிழ்வித்துக் கொண்டும் சந்திரனிடமிருந்து தோன்றியதோ, எந்த ஆய்குலம் தோன்றியதால் சந்திரனுக்கிருந்த களங்கம் நீங்கியதோ (அதாவது சந்திரன் பெருமைபெற்றானோ) எவருடைய சேனையிலுள்ள யானைகளின் தந்தங்களாகிய உளிகளினால் அஸ்தாசலம், இமாசலம், மலயம் என்னும் மலைகளின் சாரல்கள் செதுக்கப்பட்டு வெற்றித் தூண் கள் போல் அமைக்கப்பட்டன வோ.....



Kerala State Gazetteers - Volume 2



மேலும், சங்க இலக்கியங்களில் ஆய்மன்னர்கள்

 * வல்லவர்கள் (Vallava),

* பல்லவர்கள் (Ballava), அல்லது ஸ்ரீகிருஷ்ணரின் புகழ்பெற்ற யாதவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பலவாறு குறிப்பிடப்படுகின்றனர். இவைகள் யாவும் சாளுக்கியர்களுக்குரிய குலத்தலைப்புகளே ஆகும். 


அகஸ்திய முனிவருடன் முகில்வண்ணனாகிய கிருஷ்ணபகவானின் துவாரகையிலிருந்து ஆய் வேளிர்கள் தென்னகம் வந்ததாக கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.


சாளுக்கியர்கள் தங்களை வேள்குலமாகிய வேளிர் குலத்தவர்கள் என்று குறிப்பிட்டதும், கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் தனது குலோத்துங்கசோழன் உலாவில் துவரை முகில்வண்ணன் மரபில் வந்த சாளுக்கிய குலோத்துங்கசோழன் என்று குறிப்பிட்டதையும் இணைத்துப் பார்க்கையில் ஆய்வேளிர்கள், சாளுக்கியர்களின் நெருங்கிய சகோதர வகையினரே என்று ஐயமின்றி குறிப்பிடலாம்.




 நாராயணவரம் யாதவராயர்கள்:-



நாராயணவரம் யாதவராயர்கள் - (சாளுக்கியர் வம்சாவளிகள்)


கீழை சாளுக்கியர்களின் வழித்தோன்றலாக ஆந்திராவின் காளஹஸ்தி, சித்தூர், சந்திரகிரி துவங்கி தெற்கே வடதமிழகத்தின் காஞ்சிபுரம் வரை நாராயணவரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டவர்கள் யாதவராயர்கள்.

யாதவராயர்கள் தங்களை வேங்கி சாளுக்கியரின் வழிவந்தவர்களாக கூறிக்கொண்டனர் மேலும் சாளுக்கிய வம்சத்திற்கே உரிய கீழ்கண்ட சாளுக்கிய குல தலைப்புகளை யாதவராயர்கள் தங்களை குறிக்க தங்களுடைய கல்வெட்டுகளில் பொறித்துள்ளனர். அவை :


சந்திர குல திலகன்

சசிகுல சாளுக்கி

சாளுக்கிய நாராயணன்

வேங்கி சமஸ்தராஜாஸ்ராயன்

வேங்கி வல்லபன்

வேங்கி நாயகன்



சந்திர குல திலகன்:-



சந்திர குலத்திலகன்



சந்திரகுல திலகன் - யாதவராயர்



யாதவராய  மன்னர் திருக்காளத்திதேவர் திருமலை திருப்பதி திருக்கோவிலுக்கு நிர்வாக ரீதியிலான கொடைகளை வழங்கிய கல்வெட்டில் (கல்வெட்டு எண்.170) தம்மை சந்திரகுலத் திலகன் என்று குறிப்பிட்டுட்டுள்ளார், அதாவது சந்திர குலத்திற்கு ஆபரணம் போன்றவன் என்பது பொருள்.




சசிகுல சாளுக்கி கல்வெட்டுகள்:-



தென்னிந்திய சாசனங்கள் (South indian inscriptions) தொகுதி - 8, 

கல்வெட்டு எண்கள் : 

• எண்.380

• எண்.469

• எண்.482

• எண்.648

• எண்.648A

ஆகிய கல்வெட்டுகள் யாதவராயர்கள் சசிகுல சாளுக்கி (சந்திரகுல சாளுக்கியர்) என்றும் தனிநின்று வென்றான் என்றும் தங்களை அழைத்துக்கொண்டதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றது.



எண்.380



தென்னிந்திய சாசனங்கள், தொகுதி 8




எண்.469



தென்னிந்திய சாசனங்கள், தொகுதி 8




எண்.482



தென்னிந்திய சாசனங்கள், தொகுதி 8




எண்.648



தென்னிந்திய சாசனங்கள், தொகுதி 8




எண்.648A



தென்னிந்திய சாசனங்கள், தொகுதி 8





சாளுக்கிய நாராயணன்:-




சாளுக்கிய நாராயணன் - யாதவராயர்




Topographical List Of The Inscriptions Of The Madras Presidency Vol.1




Topographical List Of The Inscriptions Of The Madras Presidency Vol.2



சாளுக்கிய நாராயணன் - யாதவராயர்




யாதவராயர்கள் தங்களை சாளுக்கிய நாராயணர் என்றும் பதிவு செய்துவைத்துள்ளனர். அதாவது சாளுக்கிய பெருமாள் என்பது இதன் பொருள், இதன் அடிப்படை திருமாலின் தொழில் காத்தல் என்பதால் சாளுக்கிய குலம் தழைக்கப் பிறந்தவர்கள் என்பது இதன் சாராம்சம்.



வேங்கி வல்லபன்:-



வெங்கடகிரி, சாப்பலபள்ளி சாசனம்
வேங்கி வல்லபர் - யாதவராயர்




வேங்கி வல்லபன் - யாதவராயர்



வேங்கி வல்லபன் என்பது வேங்கிக்கு உரியவன், வேங்கியின் தலைவன் ஆகிய பொருள்களில் யாதவராயர்களின் கல்வெட்டுகளில் இடம்பெறுகின்றது. இதன் மூலம் வேங்கி அரசு தங்களுக்குரியது என்றும் வேங்கியை ஆண்ட சாளுக்கிய மரபினர் தாங்கள் என்றும் சாசனங்களின் வாயிலாக யாதவராயர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.



வேங்கி நாயகன்:-



வேங்கி நாயகன் - யாதவராயர்



யாதவராயர்களின் சாசனங்களில் தங்களை வேங்கி நாயகன் என்று கூறுகின்றனர், இதன் பொருள் கீழை சாளுக்கியர்களின் தலைநகரான வேங்கியின் அதிபதிகள், அதாவது வேங்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட கீழை சாளுக்கிய வம்சாவளிகள் என்று தங்களை குறிப்பிடுகின்றனர்.



சசிகுல சாளுக்கிய வம்சாயிவர்:- 



சசிகுல சாளுக்கிய வம்சத்தில் உதித்தவன்




வெங்கடகிரி சாசனம் - (7)


வெங்கடகிரி பிராந்தியம், சாப்பலபள்ளி விஷ்ணு கோவிலில் உள்ள 7ம் எண் கல்வெட்டில் யாதவராயர்கள் "சசிகுல சாளுக்கிய வம்சாயிவர்" என்று குறிப்பிடப்படுகிறார்கள், இதன் பொருள் சந்திர குல சாளுக்கிய வம்சத்தில் வந்த அரசன் என்னும் பொருளுடையதாகும்.




சசிகுல சாளுக்கி வம்சாயிப நாயகன்



சசிகுல சாளுக்கிய வம்சத்தின்
தலைவர்கள்




வெங்கடகிரி சாசனம் - (11)



வெங்கடகிரி பிராந்தியம், சாப்பலபள்ளி விஷ்ணு கோவிலில் உள்ள 11ம் எண் கல்வெட்டில் யாதவராயர்கள் "சமஸ்த சசிகுல சாளுக்கிய வம்சாயிப நாயகன்" என்று குறிப்பிடப்படுகிறார்கள், இதன் பொருள் யாதவராயர்கள் தம்மை மிகுந்த புகழுடைய சந்திர குல சாளுக்கிய வம்சத்தின் தலைவர்கள் என்று பெருள்படுமாறு அமைந்துள்ளது.




சாளுக்கிய வம்ச யாதவராயர்:-



South Indian Inscription, Volume -3



South Indian Inscription, Volume -3



● "வீரநரசிம்மதேவ யாதவராயர் தன்னை இளவரசர் சிம்ஹா என்கிற வீரராக்ஷசா-யாதவராஜா என்று பதிவு செய்கிறார். இவர் திருக்காளத்திதேவர் என்ற யாதவராஜாவின் மகன்." 

"திருக்காளத்திதேவ யாதவராஜா மற்றும் அவரது மகன் இருவரும் கிழக்கு சாளுக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் வேங்கி வல்லபர் மற்றும் சசிகுல சாளுக்கியன் அகிய குலத்தலைப்புகளை உடையவர்கள்".

   - South Indian Inscriptions, Vol-3, MISCELLANEOUS INSCRIPTIONS FROM THE TAMIL COUNTRY.



Inscriptions on Copper-Plates and Stones
In the Nellore District



Inscriptions on Copper-Plates and Stones
In the Nellore District




● "டாக்டர்.ஹல்ட்ஸ்ச் அவர்கள் கூற்று : யாதவராயர்கள் வேங்கிவல்லபர் மற்றும் சசிகுல-சாளுக்கி ஆகிய பட்டங்களை கொண்டிருந்தனர், இதனால் அவர்கள் கிழக்கு சாளுக்கியர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்"

 - Inscription on Copper-Plates and Stones in the Nellore District




Andhra Pradesh District Gazetteers, Chittor



Andhra Pradesh District Gazetteers, Chittor




● "யாதவராயர்கள் தொண்டைமண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் மீது அதிகாரம் செலுத்திய அரச வம்சத்தினர். திருக்காளத்திதேவ யாதவராயரே இந்த அரசவம்சத்தை தோற்றுவித்த முதல் மன்னர்.

வெங்கி இராச்சியத்தின் பகுதியை அவர்கள் ஆண்டதென்பது கிழக்கு சாளுக்கியர்களுடனான அவர்களின் தொடர்பைக் குறிக்கும் 'சாளுக்கியநாராயணன்' போன்ற உயர் ஒலிப்புடைய பட்டங்களை அவர்கள் சூட்டிக்கொண்டனர்".

           - ANDHRA PRADESH DISTRICT GAZETTEERS, CHITTOOR, 1979




The New Cambridge History of India




The New Cambridge History of India




● "யாதவராயர்கள் உள்ளூர் அரசர்களாக இருந்தனர், ஆனால் அவர்கள் தங்களை பண்டைய கிழக்கு சாளுக்கியர்கள் மற்றும் சோழர்களுடன் (சாளுக்கிய-சோழர்) தொடர்புடையவர்கள் என்று கூறினர்."

          - The New Cambridge History of India, Cambridge University Press




வல்லவர்/வல்லவாரு என்கிற சாளுக்கியர்:-



காட்டமராஜூ சுவடிகள், ஆச்சார்ய வெங்கட சுப்பாராவ்




"கொல்லவார் (யாதவ) குலத்தின் பெரும் பிரிவுகளாக “வல்லவுலு-திருமந்துலு” என்ற வார்த்தைகள் அடிக்கடி வரும். அவை “வல்லவுலவார்” என்றும் “திருமந்துலவாரு” என்றும் அழைக்கப்படுகின்றன. இவர்கள் இருவகையான யாதவ வீரர்கள். 

ஷர்மிஷ்டை என்ற க்ஷத்திரிய கன்னிகைக்கும் யயாதிக்கு பிறந்தவர்கள் வல்லவர்கள்;

தேவயாணி (சுக்கிராச்சாரியர் மகள்) என்ற பிராமணப் பெண்ணுக்குப் பிறந்தவர்கள் திருமந்துலவாரு. 


ஆவுல வலுராஜூ; அவரது ஐந்து மகன்கள்: சிம்ஹாத்தரிராஜூ, பெத்திராஜூ, ஏரணுகராஜூ, நளனுகராஜூ, போளூராஜூ மற்றும் இந்த ஐவரின் சந்ததியினரும் "வல்லவர்கள்" ஆவர்.


வல்லராஜூவின் மகள் கொமரக்காவின் சந்ததியும், சிம்ஹாத்ரிராஜூவின் மகள்களின் சந்ததியும் "திருமந்துலவாருகள்" ஆவார். வல்லவாருகள் அரியணையில் ஏறி ராஜ்ஜியத்தை ஆண்டருளினர்; திருமந்துலவாருகள் மந்திரிகளாக இருந்து வல்லவர்களுக்கு அறிவுரை வழங்கினர். 


எனவே வல்லவர்களை "ராஜூலவாரு" என்றும், திருமந்துலவாருகளை "பிரதானுலவாரு" என்றும் அழைக்கின்றனர்". 


காட்டமராஜூ சுவடிகள், ஆச்சார்ய தங்கிரால வெங்கட சுப்பாராவ்




கொல்லவார்கள் கங்கையம்மன் வழிப்பாட்டு பாடல்:



நூல்: ஆயர் வாழ்வியல் வரலாறு




இன்றளவும் தமிழகத்திலும் கூட கொல்லவார்கள் கங்கா தேவி வழிப்பாடு நடத்தும்போது தங்களின் குலப்பாடலை பாடுவர் அதில் கொல்லவார்கள் தங்களின் குலத்தினை "வல்லவாரு வம்சம்" (சாளுக்கியர் வம்சம்) என்று குறித்து கீழ்கண்டவாரு கங்கையம்மன்னிடம் வேண்டுகிறார்கள், இதனை ஆய்வாளர் திரு.எஸ்.கருணாகரன் அவர்கள் "ஆயர் வாழ்வியல் வரலாறு" என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.



"தொட்டிகாவாடு தொனகொண்ட கங்கா

பட்டி காவாடு பெனுகொண்ட கங்கா

குமாரக்கா பெற்றெடுத்தகுணவதியே, வல்லவாரு வம்சத்தை வாழவைக்கும் தாயே

கரும்புப் பந்தலிட்டு காத்துத் தருவதாய்

வாக்குக்கொடுத்திட்ட கங்கையே

உன் செயலன்றி என் செயலேதுமில்லை".



இதே முறையில் சாளுக்கியர் வம்சத்தின் சிறப்புப் பெயரும், சாளுக்கிய பேரரசர்களின் குலத்தலைப்பும்

* வல்லவர்

* வல்லபர்

* வல்லவர் கோன்

* வல்லபர் கோன்

* வல்லவ அரசர்

ஆகியவைகளே. இந்த சாளுக்கிய குலத்தலைப்புகளை சாளுக்கிய கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.



வல்லவர் எனப்படும் சாளுக்கியர்கள்



வல்லவர் - சாளுக்கியர்



வல்லவராகிய சாளுக்கியர்கள்




வல்லவர்கோன் - சாளுக்கியர்




Ephigraphia Indica, Volume 21




வல்லவர், வல்லபர் ஆகிய சொற்களின் பொருட்களை சாளுக்கிய அரசுடன் தொடர்புடைய சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம்


ஆகிய மொழிகளின் நிகண்டுகள், அகராதிகளில் குறிப்பிடும் போது



1, சமஸ்கிருதம் மொழியில்:



சமஸ்கிருத அகராதி பொருள்




வல்லவர், வல்லபர் என்பதன் சமஸ்கிருத பொருள்





■ वल्लवबल्लव   =  गोपाल; गोप

வல்லவர்/வல்லபர் = கோபாலர், கோபர்


குறிப்பாக சாளுக்கிய ஆட்சிப்பரப்பில் 


2, தெலுங்கு மொழியில்:



தெலுங்கு அகராதி பொருள்




■ వల్లవ, వల్లవుడు, వల్లవుల = గొల్ల; గొల్లవాడు

வல்லவ, வல்லவவாரு, வல்லவுடு = கொல்லவார்


3, கன்னட மொழியில்:



கன்னட அகராதி பொருள்




■ ವಲ್ಲವ = ಗೊಲ್ಲ; ಗೋಪಾಲ

வல்லவரு, வல்லவ = கொல்லவார், கோபாலர்


ஆகிய ஒற்றைப் பொருளே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




"வல்லவர்" வீட்டுப்பெயர் (Surname):-



நூல்: தெலுகுவாரி இண்டி பேர்லு,
பேராசிரியர். தேள்ல சத்தியவதி




"வல்லவர்(వల్లవులు) என்னும் வீட்டுப்பெயர் (Surname) தெலுங்கு யாதவர்களான கொல்லவாரு குலத்திற்கு மட்டுமே உரியது. இதனை "தெலுகுவாரி இண்டி பேர்லு" என்னும் நூலில் பேராசிரியர்.தேள்ல சத்தியவதி அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த வல்லவர் என்னும் சொல்லினையே தெலுங்கு முதலான பிரதேசங்களை ஆண்ட சாளுக்கியர்களும் தங்களின் குடும்பப் பெயராகக் கொண்டனர். வல்லவர்/வல்லபர் என்பது சாளுக்கியர்களின் வீட்டுப்பெயர் (Surname) என்று "Vallabha or Vallava Surname of Chalukya Kingsஎன்னும் வரிகளில் Epigraphia Indica Vol.21 என்னும் நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, உதாரணமாக, சாளுக்கிய அரசர்களில் புலிகேசி வல்லவன்ஜெயசிம்ம வல்லவன்கீர்த்தி வர்ம வல்லவன் முதலான சாளுக்கிய அரசர்களின் பெயர்களில் வல்லவர் என்னும் சாளுக்கிய வம்ச பின்னொட்டு இணைந்தே குறிப்பிடப்பட்டுள்ளது, இச்சான்றும் வேங்கி சாளுக்கிய அரச மரபினர் கொல்லவார் குலத்தவர்களே என்பதற்கான சிறந்த சான்று.




வல்லராஜூ சாளுக்கிய மரபு:-




கண்டுகூர் சாசனம் - வல்லராஜூ வம்சம்
A Collections of the Inscriptions on Copper-Plates and Stones
in the Nellore District, Madras, in Three Parts, Part II




A Topographical List of the Inscriptions of the Madras Presidency collected till 1915 with notes and References, Vol. II




The History of Andhra Country A.D.1000-1500.A.D




சாளுக்கியர்கள் தங்களை ஸ்ரீமன் நாராயணனின் (மகாவிஷ்ணு) வழிவந்தவர்களாகவும் ,சந்திர குலத்தவர்களாகவும், துவாரகை கிருஷ்ணன் (துவரை முகில்வண்ணன்) மரபாகவும், புருவம்சத்தினராகவும் வீரசோழனாரின் செல்லூர் செப்பேட்டிலும், குலோத்துங்கசோழனுலாவிலும் பதிந்துள்ளதை போலவே ஆந்திர மாநிலம், கி.பி.1258-59 கண்டுகூர் கல்வெட்டில் கொல்லவாரு (யாதவ) குல மன்னர் வல்லராஜூவின் வம்ச கல்வெட்டும் கூறுகின்றது.


"வல்லராஜு, ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர் மற்றும் யாதவ க்ஷத்திரியர் ஆவார், ஸ்ரீ மகாவிஷ்ணுவின் (நாராயணர்) தெய்வீக பாதங்களிலிருந்து தோன்றியவர், எதிரிகளை அழிப்பவர், மதுராபுரத்தின் அதிபதியான , துவாரகை கோபிகாவல்லபரின் (துவரை முகில்வண்ணன்) வழிவந்தவர். புகழ்பெற்ற புருவின் பரம்பரை" என்று கூறுகின்றது. 




விஷ்ணுவர்தனரின் பட்டத்தரசி:-



விஷ்ணுவர்தன சாளுக்கியன் கல்வெட்டு



கல்வெட்டு விளக்கம்




கீழை சாளுக்கிய மன்னரான விஷ்ணுவர்தன சாளுக்கியன் யாதவ குலத்து ஹைஹேய வம்ச இளவரசி ஒரு வரை திருமணம் செய்துக்கொண்டதாக நரேந்திர ம்ருகராஜா வெளியிட்ட (விஷ்ணுவர்தன சாளுக்கியன்) பிரிட்டிஷ் அருங்காட்சியக சமஸ்கிருத மொழி செப்பேடு கீழ்கண்டவரிகளில் தெரிவிக்கின்றது


[51.] तुर्नृपाणां काले काळे पालनीयो भवद्भिः [*] नरेन्द्रमृगराजस्य भ्रात[] हैहयवंशनः [*] आज्ञप्ति

[52.] रस्य धर्मस्य नृप रुद्रनृपोत्तमः ॥ *] विजयवादवास्तव्याय" अक्षरललिताचाय्यैण लिखितं [ ॥*]


* நரேந்திரம்ருகராஜஸ்ய ப்ராதா ஹைஹயவம்ஸஜாஹ ஆஜ்னாப்திர் அசி தர்மஸ்ய நற்பருத்ர நற்போதமா


இந்த விஷ்ணுவர்தன சாளுக்கியனுக்கும், ஹைஹய வம்ச இளவரசிக்கும் பிறந்தவரே நற்பருத்திர சாளுக்கியன் என்று கல்வெட்டு கூறுகிறது. இவரை தவிர வேறு இரு மகன்களும் இவர்களுக்கு உண்டு, அவர்கள் விஜயாதித்யன் மற்றும் பீம சாளுக்கி ஆகிய சாளுக்கிய இளவரசர்கள் ஆவர்.




2ம் ராஜாதிராஜனின் பட்டத்தரசி:-



South indian inscriptions, Volume -8



South indian inscriptions, Volume -8




பழைய தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இருக்கும் இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் (கி.பி. 1163 - 1178) கல்வெட்டு ஒன்று, அவரது பட்டத்தரசியை "யாதவ குல மரபில் வந்த சொள குல மணி விளக்கு சொள குல மாணிக்கம் முக்கொக்கிழானடிகள்" என்று குறிப்பிடுகிறது. அதன் வரிகளை கீழ்கண்டவாறு காணலாம் -


"வாளரசர் தலைகாக்க யாதவகுல மரபில் வந்த சொளகுலமணிவிளக்குச் சொளகுலமாணிக்கம் மடநாண்முதற்கண் நான்கின் வடிவுகொண்டு வளவசெகரன் உடணாணையுந் திருவாணையு முடன்செல்ல கவித்தாள்" (தென்னிந்திய சாசனங்கள், தொகுதி-XVII, எண்.585, வரி - 5).


"முக்கொக்கிழானடியுடன் வாழிவாழி மணம்புணர்ந்தூழியூழி" (தென்னிந்திய சாசனங்கள், தொகுதி-XVII, எண்.585, வரி - 6).


மேற்குறிப்பிட்ட கி.பி.1173ஆண்டு கல்வெட்டின் வரிகள் மூலமாக, இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் பட்டத்தரசியான முக்கோகிழானடிகள் அவர்கள் "யாதவ குல மரபில்" வந்தவர் என்பதை கூறுகிறது.


அரசியார் முக்கோகிழானடிகள் அவர்கள், சாளுக்கிய-சோழ குல வேந்தர் இரண்டாம் இராஜாதிராஜன் அவர்களை திருமணம் செய்தமையால் அவர் "சோழ குல மாணிக்கம்", "சோழ குல மணிவிளக்கு" என்று போற்றப்பட்டார்கள்.


அரசியார் முக்கோகிழானடிகளின் "யாதவ குலம்", அதாவது "சசி குலமாகும்" (சந்திர தேவனில் இருந்து தோன்றிய மரபினர்).



மேலும் மிகுதியான தகவல்களை மிகுதியான ஆவணங்களுடன் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்ச்சியாக காண்போம்...✍





Comments